தனுஷிடம் போட்டோ எடுக்கிறன்னு சில நடிகைகள்!! ஓபனாக பேசிய நடிகர்..
இட்லி கடை
நடிகர் தனுஷ் நடித்து இயக்கியுள்ள இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
படத்தில் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் முக்கிய ரோலில் நடித்துள்ளார். ஆடியோ லான்சில் கலந்து கொண்டு பேசிய பார்த்திபன் படத்தின் பிரமோஷனுக்காக பேட்டியளித்துள்ளார்.
சேரக்கூடாதது
தனுஷிடம் சேர்ந்து இருப்பது, சேரக்கூடாதது என்ன என்று தொகுப்பாளினி கேள்வி எழுப்ப அதற்கு பார்த்திபன், தனுஷிடம் சேர்ந்து இருப்பது அவரின் இருமகன்கள், சேராமல் இருக்க வேண்டியது ஹீரோயின்கள் தான்.
எதுக்கு சொல்றேன்னா தனுஷ் பாவம், அப்பாவி. போட்டோ எடுக்கிறேன்னு சில நடிகைகள் அவரிடம் வந்து நிற்க அது தேவையற்ற கிசுகிசுக்களை உருவாக்கி விடுகிறது. அதனால், நடிகைகள் தனுஷிடம் சேராமல் இருக்க வேண்டும் என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.