35 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் நடிகைகள்.. யார் யார் தெரியுமா
திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்து, ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகைகள் 35 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார்கள். அவர்களை பற்றி பார்க்கலாம் வாங்க.
தமன்னா
தென்னிந்திய சினிமாவையும் தாண்டி தற்போது பாலிவுட்டில் கலக்கிக்கொண்டிருக்கும் நடிகை தமன்னா 35 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். சமீபத்தில் தான் இவருக்கு காதல் முறிவு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பூஜா ஹெக்டே
உச்ச நட்சத்திரங்களின் ஜோடியாக தொடர்ந்து நடித்து வரும் பூஜா ஹெக்டே 35 வயதை நெருங்கி வருகிறார். ஆனால், இதுவரை தனது திருமணம் செய்துகொள்ளவில்லை.
ராஷி கன்னா
ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வரும் நடிகை ராஷி கன்னா, கோலிவுட் டோலிவுட் என பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார். 35 வயதை நெருங்கும் இவர் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை.
இவர்களை போலவே த்ரிஷா, ஸ்ருதி ஹாசன், அனுஷ்கா, ஆண்ட்ரியா ஆகியோர் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.