அந்த நடிகருடன் நான் நடிக்கவே மாட்டேன்!! நடிகை வைஷ்ணவி ஓபன் டாக்..
நடிகை வைஷ்ணவி
சின்னத்திரையில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் வெற்றி வசந்த். youtube மூலம் பிரபலமாகி, சிறகடிக்க ஆசை சீரியலில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்து தற்போது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்.
இவர் சீரியல் நடிகை வைஷ்ணவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வெற்றி மற்றும் வைஷ்ணவி திருமணத்திற்கு பின் ஒன்றாக இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை அடிக்கடி இணையத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இதற்கு பலரும் விமர்சித்து வந்த நிலையில், வைஷ்ணவி அதனை கண்டித்தபடி உருக்கமான ஒரு வீடியோவை பகிந்தார். இந்நிலையில், சமீபத்தில் நடிகர் அசாத்தின் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியொன்றில் முக்கிய விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அந்த நடிகருடன்
அதில், 4 நடிகர்களுடன், ஒருவருடன் நடனமாட வேண்டும், இன்னொருவருடன் ஹனிமூன் ரொமான்ஸ் சீனில் நடிக்க வேண்டும், இன்னொருவருடன் விளக்குமாறில் அடிக்கும் சீனிலும், மற்றொருவருடன் நடிக்கவே கூடாதுன்னு இருப்பது என்று 4 ஆப்ஷன்கள் கொடுத்துள்ளார் அசாத்.
அதற்கு வைஷ்ணவி, நவீனுடன் நடனமாடவேண்டும், அசாத்தை விளக்குமாறால் அடிக்கணும், ஏற்கனவே நாம் இருவரும் அந்த சீனில் நடித்திருக்கிறோம். ஹனிமூன் ரொமான்ஸ் காட்சியில் பொன்னி சீரியல் நடிகர் சபரியுடன் நடிக்க வேண்டும், ஏற்கனவே இருவரும் நடித்திருக்கிறோம்.
இந்த நடிகருடன் நடிக்கவே கூடாது என்றால் மகாநதி சீரியல் நடிகர் சுவாமிநாதன் தான். ஏனென்றால் அவருக்கு பெரியளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று வைஷ்ணவி பகிர்ந்துள்ளார்.