போதைக்கு அடிமை..பிரபல இயக்குநருக்கு சொந்த மகனால் நடந்த சோகம்..

Gossip Today Hollywood Murder
By Edward Dec 16, 2025 11:30 AM GMT
Report

ராப் ரெய்னர்

ஹாலிவுட் சினிமாவில் This Is Spinal Tap, Being Charlie உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமானவர் தான் இயக்குநர் ராப் ரெய்னர். சிறந்த இயக்குநருக்கான கோல்டன் குளோப் விருதை 4 முறை வென்றுள்ள ராப் ரெய்னர், லாஸ் ஏஞ்சல்ஸிலுள்ள வீட்டில் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த 78 மற்றும் 68 வயதுடைய தம்பதியின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

போதைக்கு அடிமை..பிரபல இயக்குநருக்கு சொந்த மகனால் நடந்த சோகம்.. | Hollywood Director Rob Reiner His Wife Found Dead

ஆரம்பத்தில் விவரம் தெரியாத நிலையில், அதன்பின் அவர்கள் இயக்குநர் ராப் ரெய்னர் மற்றும் அவரது மனைவி மைக்கேல் சிங்கர் ரெய்னர் என்று காவல் துறையினர் உறுதிப்படுத்தினர்.

நிக் ரெய்னர்

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர்களின் மகன் நிக் ரெய்னரை காவல் துறையினர் கைது செய்திருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த சனிக்கிழமை இரவு பிரபல நடிகர் கோனன் ஓபிரையன் வழங்கிய விருந்தில் பங்கேற்றபோது, நிக் ரெய்னருக்கும் அவரது பெற்றோருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

போதைக்கு அடிமை..பிரபல இயக்குநருக்கு சொந்த மகனால் நடந்த சோகம்.. | Hollywood Director Rob Reiner His Wife Found Dead

இதையடுத்து சில மணிநேரங்களில் அவர்கள் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. 25 வயதாக நிக் ரெய்னர், போதைப்பழகத்திற்கு அடிமையாகி 15 வயதிலேயே மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டிருந்தார்.

2016ல் பீயிங் சார்லி என்ற படத்தில் ராப் மற்றும் நிக் ரெய்னர் போதைப்பழக்கம் குறித்து விரிவாக அலசியிருந்தனர். அதேபோல், நிக் ரெய்னர் போதைப் பழகத்திற்கு எதிரான தன்னுடைய போராட்டம் குறித்து பகிரங்கமாக பேசியிருக்கிறார். அதில், 18 வயதிலேயே சிகிச்சை மையங்களுக்கு சென்று வந்ததை குறிப்பிட்டும் இருக்கிறார்.