ஆண்களின் உடல் அமைப்பை பற்றி தெரிஞ்சிக்கணும்.. ஓபன்னாக பேசிய திரிஷா!!

Trisha Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan May 24, 2024 09:30 AM GMT
Report

சூர்யா நடிப்பில் வெளிவந்த மௌனம் பேசியதே என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை திரிஷா. முதல் படத்திலே ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.

இதையடுத்து சாமி, அலை, கில்லி, ஆயுத எழுத்து, நந்தா, ஆறு உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தார். தற்போது 41 வயதான திரிஷா, இப்போதும் மார்க்கெட்டின் உச்சத்திலே இருந்து வருகிறார்.

ஆண்களின் உடல் அமைப்பை பற்றி தெரிஞ்சிக்கணும்.. ஓபன்னாக பேசிய திரிஷா!! | Actrss Trisha Viral Video

இந்நிலையில் திரிஷா பேசிய பழைய பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசுகையில், எனக்கு எப்போதுமே ஒரு சின்ன ஆசை இருக்கும் அது என்னவென்றால் ஒரு நாளைக்காவது ஆணாக இருக்க வேண்டும் என்று. ஒரு பையனாக இருப்பது எப்படி, அவர்களின் உடல் அமைப்பு, அவர்களின் மனநிலை பற்றி தெரிஞ்சிக்கணும் ஆசை இருக்கிறது. நான் என்னுடைய அம்மா கிட்ட சொல்லிகிட்டே இருப்பேன் என்று திரிஷா பேசியுள்ளார்.