பிரபல நடிகரின் மகளுடன் உறவில் இருக்கும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்தர்!! விரைவில் திருமணமா?
Prabhu
Vikram Prabhu
Tamil Directors
By Dhiviyarajan
சமீபத்தில் மார்க் ஆண்டனி என்ற மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்து பிரபலமானவர் தான் ஆதிக் ரவிச்சந்திரன்.
இவர் இயக்குனர் மட்டுமின்றி சில படங்களில் நடித்தும் இருக்கிறார். மார்க் ஆண்டனி படத்தின் வெற்றி அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்துடன் கூட்டணி வைத்து இருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதற்கிடையில் ஆதிக் குறித்து தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால் பிரபல நடிகர் பிரபுவின் மகளை ஆதிக் ரவிச்சந்திரம் காதலித்து வருகிறாராம்.
தற்போது இரண்டு வீட்டாரின் சம்மதத்துடன் அவர்கள் டிசம்பர் மாதம் 15ம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.
இது தொடரப்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு பிரபு குடும்பத்தில் இருந்து விரைவில் வரும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.