யாரு மாமே ரம்யா!! குட் பேட் அக்லி இயக்குநர் ஆதிக்கை கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்..

Ajith Kumar Trisha Viral Video Adhik Ravichandran Good Bad Ugly
By Edward Feb 25, 2025 04:30 AM GMT
Report

குட் பேட் அக்லி

நடிகர் அஜித்குமார் நடிப்பில் விடாமுயற்சி படத்தினை தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டு அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தனர்.

யாரு மாமே ரம்யா!! குட் பேட் அக்லி இயக்குநர் ஆதிக்கை கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்.. | Adhik Ravichandran Heroine Names Ramya Goodbadugly

சமீபத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்த திரிஷாவின் கேரக்டர் மற்றும் பெயரை படகுழுவினர் வீடியோ மூலம் தெரிவித்தனர். அதில் திரிஷா ரம்யா என்ற ரோலில் நடித்துள்ளதை அறிவித்தனர்.

யாரு மாமே ரம்யா!! குட் பேட் அக்லி இயக்குநர் ஆதிக்கை கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்.. | Adhik Ravichandran Heroine Names Ramya Goodbadugly

திரிஷா ரம்யா

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய முதல் படத்தில் கதாநாயகி ஆனந்தி, ரம்யா என்ற ரோலில் நடித்தார். அதனை தொடர்ந்து வெளியான அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் தமன்னா ரோல் ரம்யா என்றும் பஹிரா படத்தில் அமைரா தஸ்தூர் ரோல் ரம்யா என்றும் மார்க் ஆண்டனி படத்தில் ரிது வர்மாவின் ரோலின் பெயர் ரம்யா என்ற பெயரையும் வைத்திருக்கிறார்.

தற்போது குட் பேட் அக்லி படத்திலும் ஆதிக், திரிஷாவின் பெயரை ரம்யா என்று வைத்திருக்கிறார். அப்படி அந்த ரம்யா யார்? அதிக் ரவிச்சந்திரனுக்கும் ரம்யா பெயருக்கும் என்ன செண்டிமெண்ட் இருக்கிறது ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி மீம்ஸ்களை பகிர்ந்து வருகிறார்கள்.

GalleryGalleryGallery