படவாய்ப்பில்லை! 70 வயது நடிகருடன் இணைகிறாரா நடிகை அதுல்யா...
tollywood
akhil
athulyaravi
mammootty
By Edward
தமிழ் பேசும் நடிகையாக அறிமுகமாகுபவர்களில் காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் அறிமுகமாகியவர் நடிகை அதுல்யா ரவி. இதையடுத்து அடுத்து சிறு பட்ஜெட் படங்கள் மூலம் நடித்து பிரபலமானார். கடைசியா நடிகர் சாந்தனுவுடன் முருங்கைகாய் சிப்ஸ் படத்தில் நடித்திருந்தார்.
அப்படம் வரும் நவம்பர் 17ல் வெளியாகவுள்ளது. இதையடுத்து படவாய்ப்புகள் எதும் அமையாமல் இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தமிழில் யாரும் கண்டு கொள்ளாததால் தெலுங்கு, மலையாளம் பக்கம் சென்றுள்ளார்.
அதுவும் வயது அதிகம் உள்ள நடிகரான மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். தெலுங்கு நடிகர் அகில் மற்றும் நடிகை சாக்ஷி வைத்யா நடிக்கவுள்ளனராம்.