கோவிலில் வைத்து கீர்த்தியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த இயக்குனர்!..வெடிக்கும் புதிய சர்ச்சை
Indian Actress
Prabhas
Kriti Sanon
Actress
By Dhiviyarajan
பிரபாஸ் நடிப்பில் இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் "ஆதிபுருஷ்". இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் வருகின்ற 16 -ம் தேதி வெளியாக உள்ளது.
ஆதிபுருஷ் திரைப்படம் ராமாயண கதையை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது. இந்த படத்தில் சீதாவாக நடிகை கீர்த்தி சனோன் நடிக்கிறார்.
இந்நிலையில் ஆதிபுருஷ் திரைப்படம் வெற்றி பெற கீர்த்தி சனோன், ஓம் ராவத் ஆகியோர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர். அப்போது அங்கிருந்து கிளம்பிய கீர்த்தி சனோனை இயக்குனர் ஓம் ராவத் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.
இதற்கு சிலர் கோவிலில் வைத்து இது போன்ற செயலில் ஈடுபடுவது தவறு என்று சிலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதனால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.