என்னடா பண்ணி வச்சியிருக்கீங்க?.ஆதிபுருஷ் படத்தை பங்கம் பண்ணும் நெட்டிசன்கள்..ட்விட்டர் விமர்சனம் இதோ!

Prabhas Tamil Movie Review Adipurush
By Dhiviyarajan Jun 16, 2023 07:15 AM GMT
Report

தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் இயக்குனர் ஓம் ரனாவத் இயக்கத்தில் ஆதிபுருஷ் திரைப்படம் உருவானது. இப்படம் ராமாயணத்தை மையமாக வைத்து பிரமாண்ட பொருட் செலவில் எடுத்துள்ளனர்.

இதில் கீர்த்தி சானோன், சைஃப் அலிகான் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் இன்று மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான அதிபுருஷ் படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனமே கொடுத்து வருகின்றனர்.

ராமர் கதாபாத்திரத்தில் நடித்த பிரபாஸ் சந்திரமுகி படத்தில் வரும் மந்திரவாதி போல் இருக்கிறார். இராவணன் கதாபாத்திரமும் மோசமாக வடிவமைத்துள்ளனர், பல காட்சிகள் கார்ட்டூன் போல் இருக்கிறது என்றும் ரசிகர்கள் பங்கமாய் கலாய்த்து வருகிறார்கள்.