அது போன்ற படங்களில் நடிக்க வேண்டும்.. 28 வயதில் அதிதிக்கு இப்படி ஒரு ஆசையா?

Tamil Cinema Aditi Shankar Actress
By Bhavya Sep 27, 2025 03:30 AM GMT
Report

அதிதி ஷங்கர்

கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமன் படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் அதிதி ஷங்கர். இயக்குநர் ஷங்கரின் மகளான இவர் முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றார்.

இதை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படமும் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

ஆனால், இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த நேசிப்பாயா திரைப்படம் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இப்படம் தமிழ்நாட்டில் படுதோல்வியை சந்தித்துள்ளது.

அது போன்ற படங்களில் நடிக்க வேண்டும்.. 28 வயதில் அதிதிக்கு இப்படி ஒரு ஆசையா? | Aditi About Her Wish To Act Films

இப்படி ஒரு ஆசையா?  

இந்நிலையில், பேட்டி ஒன்றில் சினிமா அனுபவம் குறித்து அதிதி பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், " என் அப்பாவை பார்த்து சிறு வயதில் இருந்தே நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை வந்தது. என் ஆசையை அப்பாவிடம் சொன்னபோது முதலில் படி என்று கூறிவிட்டனர்.

அதனால் எனக்கு பிடித்த மருத்துவம் படித்து முடித்தேன். பின் அப்பாவிடம் சென்று நடிப்பில் சாதிக்க முடியவில்லை என்றால் மீண்டும் படிக்க வந்து விடுகிறேன், என்று சொல்ல அவர் சரி என்றார்.

பின் சினிமாவில் நுழைந்தேன், அடையாளம் பெற்றேன். எனக்கு ஒரு வரலாற்று படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை. அது விரைவில் நடக்க காத்து கொண்டிருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.  

அது போன்ற படங்களில் நடிக்க வேண்டும்.. 28 வயதில் அதிதிக்கு இப்படி ஒரு ஆசையா? | Aditi About Her Wish To Act Films