சூப்பர் ஸ்டாரையே கேள்வியால் மடக்கிய சங்கர் மகள் அதிதி.. என்னவொரு தைரியம்

Rajinikanth Shankar Shanmugam Aditi Shankar
By Edward Aug 12, 2022 07:10 AM GMT
Report

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் சங்கர். சமீபத்தில் தன் மகள் அதிதி சங்கரை விருமன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகப்படுத்தி வைத்தார்.

அதிதி சங்கர், கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் இப்படம் இன்று வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பிரமோஷன் வேலைகளில் அதிதி சங்கர் ஈடுபட்டு பேட்டிகளை கொடுத்து வருகிறார்.

சூப்பர் ஸ்டாரையே கேள்வியால் மடக்கிய சங்கர் மகள் அதிதி.. என்னவொரு தைரியம் | Aditi Shankar Asked Some Questions To Super Star

அப்படி சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், எனக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி தான் எப்பவுமே. அப்பாவுடன் நடித்த படங்களில் சிவாஜி தான் என் ஆல்டைம் ஃபேவரேட் என்று கூறியிருந்தார்.

மேலும், சிவாஜி படம் வெளியானப்பின், சூப்பர் ஸ்டார் பிறந்தநாளுக்கு அப்பா ரஜினிக்கு போனில் வாழ்த்துக்கூறினார். அப்போது அந்த போனை பிடுங்கி சிவாஜி வசனம் பேசிக்காட்ட சொன்னதாகவும் அதற்கு சூப்பர் ஸ்டார் தயங்காமல் விருப்பத்தை நிறைவேற்றி ஆச்சரியத்தில் மூழ்கடித்தார்.

இதை கண்ட என் அப்பா மிரண்டு போனதாகவும் கூறினார். அவரிடம் பேசத்தயங்கும் போது அதிதி சங்கர் இப்படி நடந்துகொண்டாரே என்று பலர் அதிர்ந்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.