கார்த்தி அண்ணனையும் வாய் ஜாலத்தால் மடக்கிய சங்கர் மகள்!! சூர்யாவுடன் ரொமான்ஸ் செய்யப்போகும் அதிதி..
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் சங்கர், இந்தியன் 2, கேம் சேஞ்சர் போன்ற பிரம்மாண்ட படங்களை இயக்கி வருகிறார். சினிமா ஒரு புறம் இருக்க அவரது இருமகள்கள் வாழ்க்கையை நினைத்து நிம்மதி இல்லாத நிலைக்கு இருந்து வருகிறார். அதைவிட்டுவிட்டு சினிமா பக்கம் சென்றார் அதிதி.
மகளின் ஆசைக்காக ஒருசில படங்களில் நடிக்க வைக்கலாம் என்று நினைத்திருந்த அப்பாவுக்கே தெரியாமல் பல படங்களில் கமிட்டாகியிருக்கிறார் அதிதி சங்கர். அவரது குடும்பத்திற்கு அதிதி நடிப்பது பிடிக்கவில்லை என்பதால் விரைவில் ஒரு பெரிய இடத்து வரனை பார்த்து செட்டிலாக்க முடிவு செய்திருக்கிறாராம் இயக்குனர் சங்கர்.
ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணன், யார் அந்த மாப்பிள்ளை நான் பார்க்க வேண்டும் என்று கூறியிருந்தார்., இந்நிலையில் விருமன் படத்தில் கார்த்தியுடன் ஜோடிபோட்டு ஒரு பாட்டையும் பாடியிருந்தார்.
தற்போது கார்த்தி அண்ணன் நடிகர் சூர்யா படத்திலும் நடிக்கவுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் நடிக்கவுள்ள சூர்யாவின் 43வது படத்தில் கதாநாயகியாக கமிட்டாகி இருக்கிறார் அதிதி சங்கர்.
