2-ஆம் திருமணம் செய்த நடிகருடன் ரொமான்ஸ் செய்யும் சங்கர் மகள் அதிதி..
பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் சங்கரின் இரண்டாம் மகள் அதிதி சங்கர் டாக்டர் படிப்பினை முடித்துவிட்டு நடிக்கும் ஆசையில் சினிமாவில் அறிமுகமாகினார். இயக்குனர் முத்தைய்யா இயக்கத்தில் கார்த்தி-க்கு ஜோடியாக விருமன் படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமாகினார்.
படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற அதிதி, சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் கமிட்டாகி அதற்காக 25 லட்சம் சம்பளமாக பேசப்பட்டு நடித்து வருகிறார். அடக்கவுடக்கமாக ஆரம்பித்தில் இருந்த அதிதி, போகபோக கிளாமர் லுக்கிற்கு மாறி போட்டோஷூட் எடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் ஏற்கனவே ஒருசில படங்களில் கமிட்டாகி நடித்து வரும் நடிகை அதிதி, பிரபல நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். ஏற்கனவே விவாகரத்தாகி இரண்டாம் திருமணம் செய்து கொண்டதால் வாய்ப்பினை இழந்து மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஷ்ணு விஷால்.
சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வரும் நிலையில் சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் நடிகை அதிதி சங்கர் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளர் என்றும் விரைவில் படப்பிடிப்பு ஆரம்பிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
