விஜய் டிவி டிடி-யின் முதல் திருமணத்தில் சங்கர் மகள்.. அடையாளமே தெரியாமல் இருக்கும் அதிதி

Dhivyadharshini Shankar Shanmugam Aditi Shankar Maaveeran Viruman
By Edward Aug 25, 2022 10:30 PM GMT
Report

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் தற்போது ராம் சரண் மற்றும் இந்திய 2 போன்ற படங்களில் பிஸியாக இருந்து வருகிறார். இடையில் மூத்த மகள் திருமண பிரச்சனை இரண்டாம் மகள் அதிதி சங்கரின் சினிமா அறிமுகம் என்று பல வேலைகளை பார்த்தும் வருகிறார்.

இரண்டாம் அதிதி சங்கர் தற்போது விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பட்டையை கிளப்பி வருகிறார். சங்கர் மகள் என்ற ராசியோ தெரியவில்லை நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகி இருக்கிறார்.

இப்பொழுது மாடர்ன் ஆடையில் அனைத்து வித லுக்கிலும் இருக்கும் அதிதி கடந்த 8 வருடங்களுக்கு முன் ஆள் அடையாளமே தெரியாமல் இருந்துள்ளார். பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி டிடி ஸ்ரீகாந்த் என்பவரை 2014ல் திருமணம் செய்திருந்தார்.

அப்போது சங்கர் தன் மனைவி மகள் அதிதியுடன் வருகை தந்துள்ளார். அதில் அதிதி குண்டாக அடையாளம் தெரியாத அளவிற்கு வேறொரு தோற்றத்தில் இருக்கிறார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி அதிதி-யா இது என்று ஷாக்காகி வருகிறார்கள்.


GalleryGallery