நடிகையானது அடையாளம் தெரியாமல் மாறிய சங்கர் மகள் அதிதி.. அப்படியொரு வேகம்..
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக திகழும் இயக்குனர் சங்கர், தன்னுடைய இரண்டாம் மகள் அதிதி சங்கரை சமீபத்தில் வெளியான விருமன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகப்படுத்தினார்.
மருத்துவ படிப்பினை முடித்து விட்டு அப்பாவின் சம்மதம் கேட்டு நடிக்க ஆரம்பித்த அதிதி விருமன் படத்தில் கார்த்தி-க்கு ஜோடியாக முத்தையா இருக்கத்தில் கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார். நடிகையாக அறிமுகமாகிய முதல் படத்திலேயே பின்னணி பாடகியாகவும் மதுர வீரன் என்ற பாடலுக்கு பாடியும் இருக்கிறார்.

கடந்த வாரங்களாக தமிழ் சினிமாவில் அதிகமாக உபயோகிக்கும் நடிகைகளின் பெயரில் அதிதியும் இருந்து வருகிறார். எந்த ஊருக்கு சென்று மேடையில் பேசினாலும் தன் க்யூட்டான பேச்சு மொக்கையான காமெடியோடு பேசி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அப்படி போட்டோஷூட் பக்கமும் சென்றுள்ள அதிதி சினிமாவிற்கு அறிமுகமாகுவதற்கு முன் இருந்த புகைப்படத்தை வைத்து பார்த்தால் தற்போது முற்றிலும் ஆள் அடையாளம் தெரியாமல் மாறி இருக்கிறார்.
சில வருடங்களுக்கு முன் அதிதி சங்கர் குடும்பத்துடன் சென்ற நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பார்த்து இதுதான் அதிதி சங்கரா என்று ரசிகர்கள் ஷாக்காகி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
