சிவகார்த்திகேயனிடம் ஸ்டுடியோவில் சண்டை போட்ட நடிகை அதிதி சங்கர்!! வைரலாகும் வீடியோ..
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்திற்கு பிறகு மாவீரன், அயலான், கமல் ஹாசன் தயாரிப்பில் ஒரு படம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மாவீரன், அயலான் படங்களில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள நிலையில் மாவீரன் படத்தின் இரண்டாம் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகவுள்ளது என படக்குழு அறிவித்திருந்தது.
அப்பாடலில் பிரமோ வீடியோ சிவகார்த்திகேயன் ஸ்டைலில் வெளியிட்டுள்ளனர். அதில் அதிதி சங்கர் ஸ்ரேயா கோஷல் என்றும் சிவகார்த்திகேயனை சித்ஸ்ரீராம் என்றும் கூறி ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு இசையமைப்பாளர் பரத் சங்கர் வரவழைத்துள்ளார்.
உண்மையை அறிந்ததும் அதிதி சங்கர் சிவகார்த்திகேயனிடம் சண்டை போட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
This Promo is Super cool ?❤️ Sivakarthikeyan & Aditi Shankar .. Combo Looks so.. Fresh & Entertaining , Looking forward for it ? #Maaveeranpic.twitter.com/A6hwlNcBTI https://t.co/ZXr5nVXn8Q
— Roвιɴ Roвerт (@PeaceBrwVJ) June 12, 2023