இரண்டாம் திருமணம் செய்துகொண்ட நடிகருடன் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர்..
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் தற்போது வளர்ந்து வரும் முக்கிய நடிகைகளில் ஒருவர். இவர் தற்போது விஷ்ணு வர்தன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இதை தொடர்ந்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பட இயக்குனர் கோகுல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. சிம்பு - கோகுல் கூட்டணியில் உருவாகவிருந்த திரைப்படம் கொரோனா குமார்.
இப்படத்தில் தான் அதிதி ஷங்கர் ஹீரோயினாக கமிட் ஆனாராம். ஆனால், தற்போது அப்படத்தில் இருந்து சிம்பு விலகிவிட்டார். அவருக்கு பதிலாக இப்படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார் என்கின்றனர்.
மேலும் இப்படத்திற்கு வைப் குமார் என தலைப்பு மாற்றப்பட்டுவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவர் ஆவார். இவருடைய முதல் திருமணம் விவாகரத்தில் முடிவுக்கு வர, ஜுவாலா கட்டா என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video