நடிகை அதிதி ஷங்கரின் லேட்டஸ்ட் கிளாம் லுக்!! ரீல்ஸ் வீடியோ..

Shankar Shanmugam Ram Charan Aditi Shankar Tamil Actress
By Edward Dec 29, 2024 09:39 AM GMT
Report

அதிதி 

மருத்துவ படிப்பு படித்து விட்டு பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளாக நடிகை அதிதி - கார்த்தி நடித்த விருமன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார். முதல் படமே நல்ல வரவேற்பை அளித்ததோடு அப்படத்தில் ஒரு பாடலை பாடி பாடகியாகவும் அறிமுகமாகி அசத்தினார்.

அப்படத்தினை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நடித்திருந்தார். தற்போது நேசிப்பாயா, விக்னேஷ் காந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகி வரும் படத்திலும் நடித்து வருகிறார்.

நடிகை அதிதி ஷங்கரின் லேட்டஸ்ட் கிளாம் லுக்!! ரீல்ஸ் வீடியோ.. | Aditi Shankat Latest Game Changer Event Reels

இயக்குநர் விஷ்ணு வர்தன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள நேசிப்பாயா படத்தின் டீசரும் பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.

கேம் சேஞ்சர்

மேலும் தெலுங்கில் பைரவரம் என்ற படத்திலும் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார். சமீபத்தில் அவரது அப்பா ஷங்கர் இயக்கி வெளியாகவுள்ள கேம் ஜேஞ்சர் படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாட்டும் பாடியிருக்கிறார். கிளாமர் லுக்கில் எடுத்த அவரது ரீல்ஸ் வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள்.