நடிச்சது ரெண்டே படம்!! கிளாமர் லுக்கிற்கு மாறிய சங்கர் மகள் அதிதி சங்கர்..
பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் சங்கர் மகள் டாக்டர் படிப்பை முடித்து நடிக்க வேண்டும் என்ற ஆசையில் விருமன் படத்தில் கமிட்டாகினார்.
முத்தையா இயக்கத்தில் கார்த்தி-க்கு ஜோடியாக நடித்த அதிதி முதல் படத்திலேயே பாடகியாகவும் கதாநாயகியாகவும் அறிமுகமாகி கலக்கினார்.
அப்படத்தின் வெளியீட்டுக்கு முன்பே சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் 25 லட்ச சம்பளத்தில் கமிட்டாகினார்.
விருமன் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் மாவீரன் படமும் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பாடியிருந்தார். படமும் வெளியாகி 75 கோடி வசூலை பெற்றது.
இப்படத்தினை தொடர்ந்து அதிதி சங்கர் சில படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தியும் வருகிறார்.
அந்தவகையில் செல்வராகவன் இயக்கத்தில் 7ஜி ரெயின்போ காலணி 2 பாகத்தில் முக்கிய ரோலில் நடிக்கவும் வாய்ப்புள்ளதாம்.
இந்நிலையில் நடித்து வெளியாகி ரெண்டே படத்திற்கு பின் கிளாமர் லுக்கிற்கு மாறியிருக்கிறார் அதிதி சங்கர். தற்போது சேலையில் ரசிகர்கள் மயக்கும் லுக்கில் எடுத்த போட்டோஷூட்டினை பகிர்ந்துள்ளார்.






