அதிமுக கூடாரத்தை நடுங்க வைத்த அன்வர்! சசிகலாவுக்கு கொக்கி போட்ட பிரமுகர்!
அதிமுக கட்சியில் எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்த காலத்தில் மேடைப்பேச்சை கச்சிதமாக பேசி உசுப்பேற்றுவதில் சிறந்தவராக இருந்தவர் அன்வர் ராஜா. தற்போதைய கட்சி பொறுப்பில் இருப்பவர்கள் கட்சிக்கு எதிராக பேசியதாக கூறி கட்சியைவிட்டு நீக்கி வெளியேற்றியுள்ளனர்.
இதன்பின் அன்வர் திமுக மற்றும் சசிகலாவை நோக்கி படையெடுப்பார் என்று பார்த்தால் அதுவும் நடக்கவில்லை. பேட்டியும் கொடுக்காமல் அமைதியாக இருந்துள்ளார் சில காலமாக.இதற்கு திமுக கட்சியினரும் மறைமுகமாக அவரை கவனிக்க தனிப்படையை வைத்துள்ளது என்றும் கூறப்பட்டது.
ஆனால், சசிகலாவை யாருக்கும் தெரியாமல் சென்று சந்தித்ததாகவும், நிங்கள் ஏன் இங்கு வருகிறீர்கள், அங்கேயே இருங்கள் என்றும் நான் அங்கு வந்துவிடுவேன் என்றும் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் அதிமுக கட்சியினர் என்ன செய்வதென்று தெரியாமல் நடுங்கியுள்ளதாக கூறப்படுகிறது.