முகம் சுளிக்க வைக்கும் வெப் தொடர்கள்!! 18+ காட்சியில் பட்டையை கிளப்பிய ஜெய் - வாணி போஜன்...

Jai Vani Bhojan Gossip Today
By Edward 1 வாரம் முன்
Edward

Edward

Report

சினிமாவில் வெளியாகும் படங்களில் அடல்ட் காட்சிகள் மற்றும் வன்முறை காட்சிகள் இருந்தால் சென்சார் மூலம் அந்த காட்சியையே தூக்கிவிடுவார்கள். ஆனால் தற்போது தலைவிரித்தாடும் ஓடிடி தளங்களில் வெளியாகும் வெப் தொடர்களில் எக்கச்சக்க அடல்ட் காட்சிகள் உட்பட மோசமான முகம் சுளிக்கும் காட்சிகள் அமைந்திருக்கும். அப்படி முகம் சுளிக்க, குடும்பத்துடன் பார்க்கக்கூடாத அளவிலான வெப் தொடர்கள் தமிழில் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. அந்தவகையில் 18+ காட்சிகளை வைத்து முகம் சுளிக்கவும் வைத்த சில படங்களின் லிஸ்ட்டை பார்ப்போம்..

ஆட்டோ சங்கர்

1985 காலக்கட்டத்தில் சென்னையில் கொடிக்கட்டி பறந்த ரவுடி ஆட்டோ சங்கரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஆட்டோ சங்கர் படத்தில் காட்சிகள் படுமோசமான படுக்கையறை காட்சிகள் என முகம் சுளிக்க வைப்பதோடு குடும்பத்துடன் பார்க்கக்கூடாத வெப் தொடராக அமைந்துள்ளது.

கள்ளச்சிரிப்பு

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் முதன்முதலில் வலைத்தொடரை தயாரித்த படம் கள்ளச்சிரிப்பு. ஆபாச படங்கள், ஓரினச்சேர்க்கை, கருக்கலைப்பு, எல்ஜிபிடி உள்ளிட்ட பல அடல்ட் சம்பந்தமான காட்சிகள் அமைந்து முகம் சுளிக்க வைத்தது.

விலங்கு

நடிகர் விமல், இனியா, முனிஸ்காந்த் நடிப்பில் வெளியான விலங்கு படத்தில் பல அடல்ட் காட்சிகலும் புலனாய்வு கதையை மையமாக கொண்டு எடுத்து சென்சார் கட் இல்லாமல் ரிலீஸானது.

ட்ரிபிள்ஸ்

நடிகர் ஜெய், வாணி போஜன் நடிப்பில் கடந்த 2020ல் வெப் தொடரில் வெளியான படம் ட்ரிபிள்ஸ்.ரொமாண்டில் காமெடியாக வெளியானாலும் ஜெய் - வாணி போஜன் இருவரும் நெருக்கமாக நடித்து காதல் கிசுகிசுக்களில் சிக்கும் அளவிற்கு காட்சிகள் அமைந்திருந்தது. ஓடிடி தளத்தில் வெளியானதால் தணிக்கை செய்யாமல் பல அடல்ட் காட்சிகள் அமைந்திருந்தது.

மேலும் டி7, ஜமாய் ராஜா உள்ளிட்ட பல வெப் தொடர்களில் படுக்கையறை காட்சிகள் உட்பட 18+ காட்சிகளை வைத்து வெளியாகியிருக்கிறது.