இனிமே வெறும் விஜய் தானா? சன் பிச்சர்ஸ் வீடியோவால் கோபத்தில் ரசிகர்கள்..

vijay nelson thalapathy beast vijayudannerukkuner
By Edward Apr 04, 2022 07:45 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். தன் ரசிகர்களால் தளபதி விஜய் என்று பாசத்தோடு அழைக்கப்படும் விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தின் ரிலீஸிற்காக காத்திருக்கிறார். ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் ஏப்ரல் 13ஆம் தேதி தியேட்டர்களின் வெளியாகவுள்ளனர்.

ஆடியோ லான்ச் இல்லை:-

விஜய் படம் என்றாலே ஆடியோ லான்ச் பிரம்மாண்ட பிரமோஷன் வேலைகள் என்று இருக்கும். ஆனால் இதை சன் பிச்சர்ஸ் நிறுவனம் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. சில காரணங்களால் ஆடியோ லான்ச் வேண்டாம் என்று முடிவெடுத்ததற்கே கடும் கோபத்தில் விஜய் ரசிகர்கள் இருந்து வந்தனர்.

விஜய்யுடன் நேர்காணல்”-

இந்நிலையில் விஜய் 10 வருடங்களுக்கு பின் நேர்காணலில் கலந்து கொண்டுள்ளார். படத்தின் பிரமோஷனாக இதுவே இருக்கட்டும் என்று விஜய் பேட்டிக்கு ஒப்புக்கொண்டுள்ளார். நேர்காணலை இயக்குர் நெல்சன் விஜய்யிடம் கேள்விகளை கேட்டு தொகுத்து வழங்கியுள்ளார். வரும் 10 ஆம் தேதி இந்நிகழ்ச்சி சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரபாகும்.

’தளபதி’ எங்கே:-

தற்போது விஜய்யுடன் நேருக்கு நேர் என பெயரிடப்பட்ட நிகழ்ச்சியில் தளபதியை ஏன் போடவில்லை என்று கூறி ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தளபதி விஜய் என்று அனைத்து இடத்திலும் அதிலும் டிரைலரில் கூட தளபதி விஜய் என்று குறிப்பிட்ட நீங்கள் ஏன் நிகழ்ச்சியில் தளபதி பெயரை நீக்கினீர்கள் என்று திட்டி வருகிறார்கள்.