ஓடவிட்ட அஜித், கமல்!! கோடிக்கு ஆசைப்பட்டு கணவர் விக்னேஷ் சிவனை கழட்டிவிட்ட நயன்தாரா..
முன்னணி இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் விக்னேஷ் சிவன் திரும்பும் இடமெல்லாம் கன்னி வெடியாகவே இருக்கிறது என்று தான் கூறவேண்டும். காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பின் நடிகை நயன் தாராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதன் பின் விக்னேஷ் சிவனுக்கு ஆரம்பித்தது பல பிரச்சனை. அஜித்தை இயக்க கமிட்டாகிவிட்டு சில மாதம் கழித்து அதிலிருந்து விரட்டிவிடப்பட்டார் விக்னேஷ் சிவன். அதன்பின் கமல் ஹாசன் கூட்டணியில் இணையவுள்ளார் என்ற பேச்சு எழ, அதிலும் சம்பள பிரச்சனையால் கூட்டணி உடைந்தது.

தற்போது ’லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’ என்ற டைட்டிலில் பிரதீப் ரங்கநாதனை வைத்து இயக்கவும் இருக்கிறார். இப்படத்தில் நடிகையும் விக்னேஷ் சிவனின் மனைவியுமான நயன் தாரா முக்கிய ரோலில் நடிப்பதாக கூறப்பட்டது.
ஆனால் நயனும் இப்படத்தில் இருந்து விலகிவிடதாக தகவல் வெளியாகியுள்ளது. 7ஸ்கீர்ன் ஸ்டுடியோ தயாரிக்கவுள்ள இப்படத்திற்காக நயன் தாரா 10 கோடிக்கும் மேல் சம்பளம் தருமாறு கேட்டுள்ளார்களாம்.
படத்தின் பிரமோஷனுக்காக தான் நயன் தாராவை சேர்த்துள்ளதால் அவ்வளவு பெரிய தொகையை கொடுக்க முடியாது என்று தயாரிப்பாளர் கூறியிருக்கிறார். இதனால் தான் நயன் தாரா லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்படத்தில் இருந்து விலகியிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.