விஜய் அரசியலுக்கு ஆப்பு வைக்க போகும் வெங்கட் பிரபு!! இலங்கையில் இப்படியொரு பிளான்-ஆ..
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் அவரது 68வது படத்தில் நடித்து வருகிறார். பாதி படப்பிடிப்பு நிறைவு பெற்று பிஸியாக பல வேலைகள் சென்று கொண்டிருக்கிறது. இப்படத்தினை பற்றியும் விஜய்யை பற்றியும் பிரபல சினிமா விமர்சகர் அந்தணன் சில திடுக்கிடும் தகவல்களை கூறியிருக்கிறார். அந்தணன் கூறியது, லண்டனை சேர்ந்த என் நண்பர் பரமேஸ்வரன் ஒரு செய்தியை கொடுத்திருந்தார்.
அதுபற்றி கூறுவதற்கு முன், கத்தி படம் வெளியாகும் போது எவ்வளவு பெரிய களவர பூமியானது என்பது அனைவருக்கும் சொல்லி தெரிய வேண்டிய அவசியமில்லை. அந்த படத்தை தமிழ் நாட்டில் திரையிடக்கூடாது என்று, இங்கு இருக்கும் அமைப்பினர் குரல் கொடுத்தார்கள். இதற்கு காரணம், அப்படத்தின் தயாரிப்பாளர் சுபாஸ்கரன், ராசபக்ச-வின் நெருங்கிய நண்பர், அவருடையை பிணாமி என்று மிகப்பெரிய பிரச்சனையை எழுப்பினார்கள். வழக்கமாக விஜய் படம் என்றால் பிரச்சனை வந்து பின் அது சரி செய்யப்பட்டுவிடும்.
ஆனால் கத்தி படம் வெளியிட பிரச்சனை ஏற்பட்டது. இந்த இலங்க மக்கள் கூறிய காரணம் மிகவும் அழுத்தமாக மாறியது. அந்தகாலக்கட்டத்தில் இங்கிருக்கும் சினிமா பிரபலங்கள் இலங்கைக்கு சென்றால் அவர்களை எதிர்க்கும் பழக்கம் இங்கே இருந்தது. அப்படி இலங்கைக்கு செல்ல முற்பட்ட சிலரின் வீட்டில் கூட தாக்குதல் ஏற்பட்டது. அந்த சமயத்தில் தான், சீமான் இடையில் வந்து பிரச்சனையை சரி செய்து கத்தி படம் வெளியானது. இப்போது பல பேர் இலங்கைக்கு செல்கிறார்கள், அந்த பிரச்சனை மாறிவிட்டது.
கில்மிஷா - இலங்கை அதிபர் புகைப்படமும்
அதன் ஒரு பகுதியாக, பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கில்மிஷா என்ற இலங்கையை சேர்ந்த தமிழ் சிறுமி வெற்றி பெற்று இலங்கை சென்றார். அவருடன் இலங்கை அதிபர் புகைப்படமும் எடுத்துக் கொண்டிருக்கிறார். இது மிகப்பெரிய சர்ச்சையாக உலகத்தில் இருக்கும் இலங்கை தமிழர்கள் மத்தியில் மாறியுள்ளது. அது, இலங்கை தமிழர்கள் மீது சிங்களவர்கள் இன்னும் கோபத்தில் தான் இருக்கிறார்கள்.
எந்த விரோதமும் இல்லை என்பதை காட்டிக்கொள்ளவும், அதை மாற்றவும் தான், கில்மிஷாவை அங்கு வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். ஆனால் அவர்கள் (சிங்களத்தினர்), தமிழர்கள் மீது இருக்கும் கோபம் அப்படியே தான் இருக்கிறது. யாரெல்லாம் சாதனை படைக்கிறார்களோ அவர்களுடன் புகைப்படத்தை எடுத்து, எங்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் பிரச்சனை இல்லை என்று காட்டிக்கொள்ள தான் அதை செய்கிறார்கள். அதில் விஜய் சிக்கிக்கொள்ள கூடாது என்று அந்த வீடியோவில் நண்பர் பரமேஸ்வரன் கூறியிருக்கிறார்.
GOAT ஷூட்டிங்
ஏனென்றால், வெங்கட் பிரபு ஏற்கனவே இலங்கையில் வேறொரு படத்திற்கான ஷூட்டிங் நடத்த திட்டமிட்டதாகவும் அன்று இந்த விசயம் தெரிந்து ஈழத்தமிழர்கள் வேண்டாம் என்று கூறினார்கள். அங்கு அவர் போக என்ன காரணம் முத்தைய்யா முரளிதரன் அவரது நெருங்கிய நண்பராக இருப்பதால் தான்.
அதனால் தான் அப்போது அங்கு ஷூட்டிங் எடுக்க வந்தார். அதை அப்போதே நாங்கள் தடுத்துவிட்டோம். ஆனால் இப்போது பல வருடம் கழித்து விஜய் என்கிற மாபெரும் நடிகரை அங்கு சென்று நிறுத்தியிருக்கிறார். GOAT படத்தின் ஷூட்டிங் இலங்கையில் நடந்து கொண்டிருக்கிறது.
முக்கியமாக தமிழர்கள் இருக்கும் இடத்தில் நடக்கிறது. இது ஷூட்டிங்கோடு முடிந்தால் சரி. இதை தாண்டி வேறொரு இடத்திற்கு போகிறது தான் பிரச்சனை. இலங்கையில் விஜய்க்கு ஆபத்து காத்து இருக்கிறது என்று பரமேஸ்வரன் கூறுகிறார்.
விஜய்க்கு ஆபத்து
அவர் அப்படி சொல்ல என்ன காரணம் என்றால், அரசியல் கனவு இருக்கும் விஜய்க்கு, உலகம் முழுவதும் விஜய்க்கான மார்க்கெட் ஏறியிருக்கிறது. அப்படி இருக்கும் போதுஈழத்தமிழர்களை பகைத்துக்கொள்ளும் செயலை செய்துவிடக் கூடாது. அதை செய்கிற ஆபத்து தான் விஜய்க்கு வந்திருக்கிறது. அதை உருவாக்குவதே வெங்கட் பிரபு தான். அங்கிருக்கும் ரணில் விக்ரமசிங், ராஜபக்ச உள்ளிட்டவர்களுடன் விஜய் புகைப்படம் எடுக்க வைக்கும் வேலையும் நடக்கும்.
அது முத்தைய்யா முரளிதரன் மூலமாக நடக்கும். அப்படி அது நடந்து, புகைப்படம் வெளியானால் விஜய்யின் அரசியல் என்னவாகும்? என்று தான் அவர்(பரமேஸ்வரன்) கூறி எச்சரிக்கிறார். இதில் எவ்வளவு உண்மை, கற்பனை என்பதை ஈழத்தமிழர்களிடம் விட்டுவிடுகிறேன். இது விஜய் பார்வைக்கு விட்டுவிடுகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.