முன்னணி நடிகர்களை கழட்டிவிட்ட நடிகை நயன்தாரா! அதிரடி முடிவுக்கு திருமணம் தான் காரணமா?

nayanthara nayantara vignesh shivan annathe
By Edward May 19, 2021 02:00 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் குறுகிய காலகட்டத்தில் பல ஆண்டுகளாக நம்பர் 1 நடிகையாக இருந்து வருபவர் நடிகை நயன்தாரா. தமிழில் கஜினி படத்தில் ஆரம்பித்த சினிமா வாழ்க்கை தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என பெயர் பெற்று கொடிக்கட்டி பறந்து வருகிறார்.

தற்போது நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் முன்னணி நடிகர்கல் படத்திலும் நடித்து வரும் நயன் காதலர் விக்னேஷ் சிவனுடன் காதலில் இருந்து வருகிறார். மேலும் விரைவில் திருமணம் செய்யவிருப்பதாகவும் தகவல் வெளியாகியது.

நடிகை நயன்தாரா, ரஜினிகாந்தின் அண்ணாத்தே, விக்னேஷ் சிவன், இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல், நெற்றிக்கண் போன்ற படங்களின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வந்துள்ளார். தற்போது திடீரென எந்த முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக இனிமேல் நடிக்க போவதில்லை என்று முடிவெடுத்துள்ளாராம்.

மேலும் கதாநாயகிக்கு முக்கியத்தும் தரும் படங்களே தேர்வு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார். இதற்கு என்ன காரணம் என்று கூறப்படாமல் இருக்கிறது. எனினும், விரைவில் திருமணம் செய்வதால் அதற்கு கால்ஷீட் இடிக்கும் என்பது தான் காரணம் என்று கூறப்படுகிறது.