அமெரிக்கா டூ சென்னை! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதற்காக தான் சென்றாராம்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த மாதம் உடல் பரிசோதனைக்காக அமெரிக்காவின் ராசெஸ்டர் நகருக்கு சென்றார். 2016ல் அங்குள்ள மயோ மருத்துவமனையில் பிரபல மருத்துவர்கல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டார்.
அதற்காக அண்டுதோறும் உடற்பரிசோதனைகாக அமெரிக்கா சென்று வருவது வழக்கம். கடந்த கொரோனா லாக்டவுன் எனபதால் போகமுடியாத சூழல் ஏற்பட்டது. சமீபத்தில் அண்ணாத்த படப்பிடிப்பில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
சில மாதம் ஓய்விற்கு பிறகு படப்பிடிப்பினை தொடர்ந்தா சூப்பர் ஸ்டார். அமெரிக்காவிலும் கொரோனா தொற்று குறைந்தது. இருப்பினும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மத்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று தனி விமானம் மூலமாக ஜூன்19 ஆம் தேதி அதிகாலை அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். இவருடன் இவருடைய மனைவி லதா ரஜினிகாந்தும் சென்றார்.
ஏற்கனவே தனுஷ் ஹாலிவுட் படத்திற்காக படப்பிடிப்பு வேலைகளை தொடர்ங்கியதால் அமெரிக்கா சென்றார். அதன்பின் மனைவி ஐஸ்வர்யா மகன்கள் இருவரும் சென்றனர். தந்தையை கூட இருந்து மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பார்த்து வந்தார். சற்று முன் வெளியாகியுள்ள தகவலில், தலைவர் ரஜினிகாந்த் பூரண உடல் பரிசோதனை முடிந்த நிலையில் நாளை சென்னை திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே தனுஷ் D43 ஷூட்டிங் பணிக்காக ஹைதராபாத் வந்து விட்ட நிலையில், நாளை தலைவருடன் அவரது மகள், மற்றும் பேரன்கள் சென்னை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.