டிடி, ரம்யாவை தொடர்ந்து கணவனை விவாகரத்து செய்தாரா பிரியங்கா.. இது விஜய் டிவியின் ராசி போல
டிடி - ஸ்ரீகாந்த்
விஜய் தொலைக்காட்சியில் மூத்த தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் தனது உடல்நல குறைவு காரணமாக தற்போது சில முக்கிய நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார். இவர் 2014ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட. தனது காதல் கணவர் ஸ்ரீகாந்தை 2017ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.
ரம்யா - அபர்ஜித்
இவரை போல் விஜய் டிவியில் முக்கிய தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் ரம்யா. இவர் கடந்த 2014ஆம் ஆண்டு அபர்ஜித் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஒரு வருடம் கூட நீடிக்காத இவர்களின் திருமண வாழ்க்கை 2015ல் விவாகரத்தில் முடிந்தது.
பிரியங்கா - பிரவீன்
இந்நிலையில், இவர்களை தொடர்ந்து தற்போது தொகுப்பாளினி பிரியங்காவும் விவாகரத்து செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே தனது கணவர் குறித்து எந்த விஷயத்தையும் பிரியங்கா சமூக வலைத்தளங்களில் பகிரவில்லை. அதே போல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட பிரியங்காவை காண அவரது கணவர் பிரவீன் வரவில்லை.
சமீபத்தில் திருமணம் மற்றும் வாழ்க்கை துணை குறித்து மிகவும் உருக்கமாக பிரியங்கா பேசினார். இதையெல்லாம் வைத்து பார்க்கும் பொழுது இருவருக்கும் இடையே விவாகரத்து ஆகிவிட்டது என்று பல தகவல்கள் கிளம்ப துவங்கியது. இந்த தகவல் பொய் என்றும் இதுவரை பிரியங்கா தரப்பில் இருக்கும் எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை.
இதனால், இது உண்மையாக கூட இருக்கும் கூடும் என்று கூறி வருகிறார்கள். விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளினிகளாக பார்க்கப்பட்ட இவர்கள் மூவரும் தொடர்ந்து இப்படி நடக்கிறதே. ஒரு வேல விஜய் டிவியின் ராசியாக இருக்குமோ என்று பலரும் கூறி வருகிறார்கள்.