தனிமையில் தவிக்கும் நடிகை ரச்சிதா!! அப்பா இறப்பிற்கு பின் இப்படியொரு நிலைமையில் வெளியிட்ட வீடியோ
சின்னத்திரை சீரியல் நடிகையாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. சரவணன் மீனாட்சி சீரியல் ஆரம்பித்து நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வந்தார்.
நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்த ரச்சிதா சில ஆண்டுகளுக்கு முன் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். கணவரை பிரிந்த ரச்சிதா பிக்பாஸ் 6 சீசனில் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நண்பர்களுடன் ஜாலியாக இருந்து வந்த ரச்சிதா கணவர் தன்னை டார்ச்சர் செய்கிறார் என்று புகாரளித்தார். ஆனால் தான் அப்படி ஏதும் செய்யவில்லை என்று தினேஷ் கூறியும் இனிமேல் அவரோடு வாழமுடியாததால் விவாகரத்துக்கு அணுகலாம் என்று கூறியும் விட்டார்.
இதன்பின் ரச்சிதா போட்டோஷூட் பக்கம் சென்று புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில் கடந்த மாதம் பெங்களூருவில் இருந்த அவரது தந்தை உடல்நலம் சரியில்லமால் மரணமடைந்தார். சமீபத்தில் எனக்கு நீ உனக்கு நான் என்று கூறி அவரது அம்மாவுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்தார்.
தற்போது தனிமை தான் அவளிடம் அடிமை ஆகிவிட்டது என்று கூறி சோகத்துடன் எடுத்த வீடியோ ஷூட்டினை பகிர்ந்திருக்கிறார். இதற்கு ரசிகர்களும் ஆறுதலான கருத்துக்களை கூறி வருகிறார்கள்.