30 நிமிடத்தில் வந்த வாய்ப்பு!! ரஜினிகாந்துக்காக பிரபல நடிகை செய்த செயல்..

Rajinikanth Viral Video Ramya Pandian Tamil Actress
By Jai May 23, 2026 09:00 AM GMT
Report

ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படத்திற்கு பின் ஜெயிலர்2 படம் உருவாகி இந்த ஆண்டு ரிலீஸாகவுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

30 நிமிடத்தில் வந்த வாய்ப்பு!! ரஜினிகாந்துக்காக பிரபல நடிகை செய்த செயல்.. | After Getting Chance To Meet Rajinikanth Ramya Pan

பல முன்னணி நடிகர்கள் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார்கள் என்ற தகவலும் வெளியாகி வருகிறது. ஜெயிலர் 2 படத்திற்கு பின் கமல் ஹாசன் தயாரிப்பிலும், அவருடன் இணைந்து ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த்.

ரம்யா பாண்டியன்

இந்நிலையில், ரஜினிகாந்த் தொடர்பாக ஒரு நடிகை பகிர்ந்து கொண்ட ஒரு வீடியோ இணையத்தில் டிரெண்ட்டாகி வருகிறது. தமிழ் படங்களில் நடித்து பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமான நடிகை ரம்யா பாண்டியன் வெளியிட்ட வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது.

30 நிமிடத்தில் வந்த வாய்ப்பு!! ரஜினிகாந்துக்காக பிரபல நடிகை செய்த செயல்.. | After Getting Chance To Meet Rajinikanth Ramya Pan

அந்த வீடியோவில் ரம்யா பாண்டியன், ரஜினி சாரை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த ஃபோன் வந்த 30 நிமிடங்களில் பஞ்சாப்பில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்து ரஜினிகாந்தை சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்பட தொகுப்பு வீடியோவை பகிர்ந்துள்ளார் ரம்யா பாண்டியன்.

ரம்யா பாண்டியன் நடித்துள்ள சாருகேசி படத்தின் இசை மற்றும் டிரைலரை ரஜினிகாந்த் வெளியிட்டிருந்தார். அந்த சமயத்தில் ரம்யா பாண்டியன் பஞ்சாப்பில் இருந்துள்ளார். அப்போதுதான் ரஜினிகாந்தை சந்திக்க வாய்ப்பு கிடைத்த 30 நிமிடத்தில் சென்னை வந்து சூப்பர் ஸ்டாரை சந்தித்து குருதேவின் GITA என்ற புத்தகத்தையும் கொடுத்துள்ளார் ரம்யா பாண்டியன் என்பது குறிப்பிடத்தக்கது.