தேவயானி வேண்டாம்னு சொன்னேன்..ராஜகுமரன் கேக்கல!! மாமியார் சொன்ன ரகசியம்..
ராஜகுமரனின் அம்மா
தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக 90-களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் தேவயானி. இயக்குநர் ராஜகுமாரனை காதலித்து இரு பெண் குழந்தைகளுக்கு தாயான தேவயானி தற்போது ஒருசில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தேவயானியின் மாமியாரும் ராஜகுமரனின் அம்மா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியொன்றில் தேவயானி - ராஜகுமரன் காதல் கல்யாணம் குறித்து பேசியுள்ளார்.

அதில், தேவயாணி தான் என் பையனை கல்யாணம் பண்ணனும் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது இருவரும் போனில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு விஷயம் தெரிந்ததும் நான் தேவயானி வேண்டாம்னு சொன்னேன்.
அது பெரிய இடத்து பொண்ணு அந்த பொண்ணை எப்படி நம்ம வீட்டில் கொண்டு வந்து வாழ வைப்பது என்று நான் யோசிச்சேன். தேவயானி வீட்டிலும் எதிர்ப்பு தெரிவிச்சாங்க, அதற்காக தேவயானி ஒருநாள் முழுக்க சாப்பிடாமல் இருந்திருக்காங்க. வீட்டில் எவ்வளவோ கட்டுப்பாடு வெச்சும் வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.
என் பையன்கிட்டயும் நாங்க எவ்வளவோ சொல்லி பார்த்தோம். அவனும் முடியாதுன்னு சொல்லிட்டான், ஆனா இன்னைக்கு அவங்க நல்லா தான் இருக்காங்க. தேவயானி எப்பவாவது வந்து என்னை பார்க்க வருவாங்க, தேவயானி நல்ல பொண்ணுதான். பேத்திகளும் எப்பவாவது தான் போனில் பேசுவாங்க, நேரில் வந்து பார்க்க வரமட்டாங்க என்று கூறியிருக்கிறார்.