அசிங்கப்படுத்தி ஒதுக்கிய வீரர்கள்.. ஒரே ஆளாய் இருந்து விராட் கோலிக்கு ஆதரவு அளித்த MS. தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்து தற்போது அணி வீரராக சிறப்பான பேட்டிங்கை செயல்பட்டு வருகிறார் விராட் கோலி. நேற்று நடந்த ஆசிய கோப்பை 2022ன் இந்தியா பாகிஸ்தான் போட்டியில் சிறப்பாக விளையாடி 60 ரன்களை எடுத்து பக்கபலமான இருந்தார்.
ஆனால் பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது. போட்டி முடிந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய விராட் கோலி எம் எஸ் தோனி பற்றிய சில கருத்துக்களை கூறி நெகிழ்ச்சியடைந்துள்ளார்.
நான் டெஸ்ட் கேட்பனில் இருந்து விலகியபோது எம் எஸ் தோனி மட்டுமே எனக்கு மெசேஜ் செய்திருந்தார் பலரிடம் என்னுடைய தொலைப்பேசி நம்பர் இருந்தது. ஆனல் யாரும் எனக்கு மெசேஜ் அனுப்பவில்லை. தோனியுடனான தொடர்பும் மரியாதையும் உண்மையானதாக இருக்கிறது என்று கூறி நெகிழ்ச்சியடைந்துள்ளார்.
டெஸ்ட் கேப்டன்சிப்பில் இருந்து ஓய்வு பெற்ற விராட்டினை பிசிசிஐ பல அவமானங்களை கொடுத்து வருவதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
இதன்பின் ஓடிஐ தொடரில் இருந்து கேப்டன் பொறுப்பினை விராட்டிடம் இருந்து ரோஹித் சர்மாவுடன் கொடுத்தது தான் அதற்கான காரணமாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Virat Kohli talks about his 'dark phase' after leaving Test captaincy...
— OneCricket (@OneCricketApp) September 4, 2022
"MS Dhoni was the only one to text me after I left Test captaincy" - @imVkohli #AsiaCup2022 #INDvsPAK #ViratKohli pic.twitter.com/4OiPXmNpsz