மாலத்தீவு அவுட்டிங்கிற்கு பின் இமயமலைக்கு செல்லும் ரஜினிகாந்த்.. காரணமே இதுதானாம்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இன்று ஜூலை 28 ஆம் தேதி ஜெயிலர் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இசை வெளியீட்டு விழா முடிந்த கையோடு ஆன்மீக சுற்றுலா செல்லவுள்ளராம். ஏற்கனவே மாலத்தீவிற்கு சென்று ஜாலியாக இருந்துவிட்டு ஆடியோ லான்ச் நிகழ்ச்சிக்கு சென்னை வந்திருக்கிறார் ரஜினிகாந்த்.
இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் 6 ஆம் தேதி இமயமலைக்கு செல்ல உள்ளாராம். கிட்டத்தட்ட 7 நாட்கள் ஆன்மீக சுற்றுலா மேற்கொள்ள இமயமலையில் இருக்கும் பத்ரிநாத், கேதர்நாத், பாபாஜி குகை உள்ளிட்ட இங்களுக்கு செல்லவுள்ளராம்.
கடந்த 2010ல் இருந்து தான் நடித்த படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு சென்று வரும் ரஜினிகாந்த் கடந்த 2 ஆண்டுகளாக செல்லாமல் இருந்ததால் ஜெயிலர் படம் வெற்றியை பெறவேண்டி இந்த ஆன்மீக சுற்றுலாவை மேற்கொண்டிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
எப்போது தன் தந்தையுடன் செல்லும் மகள் ஐஸ்வர்யாவும் தனுஷை பிரிந்தப்பின் ரஜினிகாந்துடன் இமயமலைக்கு செல்ல வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.