யார் வந்தால் என்ன, அம்மா வரலையே? நயன்தாரா விக்னேஷ் சிவன் கொச்சி போக இதுதான் காரணம்!!

Nayanthara Vignesh Shivan Married
By Edward Jun 13, 2022 05:41 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை பல ஆண்டுகளாக காதலித்து வந்தார். நானும் ரவுடி தான் படத்தில் ஆரம்பித்த காதல், காத்து வாக்குல ரெண்டு காதலுக்கு பிறகு திருமணத்தை முடித்து கொடுத்துள்ளது.

கடந்த ஆண்டே 2022 ஆம் ஆண்டு ஆரம்பத்திலேயே காத்து வாக்குல ரெண்டு காதல் படம் ரிலீசான பின் இருவருக்கும் திருமணம் நடைபெறும் என்று கூறப்பட்டது. ஆனால் சில காரணங்களால் காத்து வாக்குல ரெண்டு காதல் வெளியாவதில் தாமதமானதால் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகப்பட்டது.

திட்டமிடப்பட்ட கல்யாணம் :-

அனைவரும் எதிர்ப்பார்த்திருந்த திருமணம் திருப்பதியில் நடைபெற திட்டமிட்டதில் சிக்கல் எழுந்தது. பிரபலங்கள் பல வரவேண்டி இருப்பதால் அதில் சிக்கல் இருந்து பின் மகாபலிபுரத்தின் ஒரு ரெசாட்டிற்கு மாற்றப்பட்டது. பின், சூப்பர் ஸ்டார், அஜித், விஜய் உட்பட பல நட்சத்திரங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர் நயன் தாரா.

இருவருக்கு ஜூன் மாதம் பிரம்மாண்ட முறையில் ரஜினிகாந்த், ஷாருக்கான், அட்லீ, சரத்குமார், அனிருத் உட்பட பல பிரபலங்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு தம்பதியினர் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

ஏமாற்றமளித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு:-

அதன்பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்த விக்னேஷ் சிவன் மற்றும் நயன் தாரா அனைவருக்கும் நன்றி, இனிமேலும் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்றும் குறிப்பிட்டு பேசியுள்ளனர். சந்திப்புல் இருவரும் மற்ற விசயங்கள் பற்றி பேசிவிட்டு செல்வார்கள் என்று பத்திரிக்கையாளர்கள் அனைவரும் பல கேள்விகளை முன்வைத்தும் எதற்கு பதில் கூறாமல் 10 நிமிடம் மட்டுமே இருந்துவிட்டு சென்றுவிட்டனர்.

யார் வந்தால் என்ன, அம்மா வரலையே? நயன்தாரா விக்னேஷ் சிவன் கொச்சி போக இதுதான் காரணம்!! | After Marriage Nayan Vikki Went Cochi House

அம்மா இல்லாத திருமணம்:-

இந்நிலையில், நடிகை நயன்தாரா தன் ஆசை கணவரை அழைத்து கேரளாவில் தன் பெற்றோர்கள் வசிக்கு கொச்சின் வீட்டிற்கு சென்றுள்ளாராம். இதற்கு காரணம் நயன் தாராவின் தாயார் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாலும் அவரால் திருமணத்திற்கு வரமுடியவில்லை. அவரின் ஆசி பெறவும் சில நாட்கள் கேரளாவில் தங்கவும் திட்டமிட்டுள்ளார்களாம்.

யார் வந்தால் என்ன, அம்மா வரலையே? நயன்தாரா விக்னேஷ் சிவன் கொச்சி போக இதுதான் காரணம்!! | After Marriage Nayan Vikki Went Cochi House

திருமணத்திற்கு பின்:-

இதனையடுத்து நயன் தாரா ஷாருக்கான் - அட்லீ படத்தினை தொடர்வார் என்றும், விக்னேஷ் சிவன் ஏகே61 படத்தின் வேலைகளை ஆரம்பிக்கவுள்ளார் என்றும் திட்டமிடப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

GalleryGallery