500 கோடிக்கு பிளான் போட்ட பிரம்மாண்ட இயக்குனர்! போட்டியில் பெரிய தலைகள்
இந்திய சினிமாவில் பிரம்மாண்டமாக எடுக்கப்படும் பல படங்கள் சிலர் படுதோல்வியை அடைந்து தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை கொடுத்து வருகிறது. அந்தவகையில் தென்னிந்திய சினிமாவில் வெளியாகும் சமீபகால படங்கள் உலக சினிமவையே அதிரவைத்து வருகிறது.
அதில் முக்கியமானதாக இருக்கும் படங்கள் பாகுபலி, கேஜிஎஃப். பல நூறு கோடிகளை போட்டு எடுக்கப்பட்ட பாகுபலி படம் எஸ் எஸ் ராஜமவுலியால் இரு பாகங்களாக வெளியாகி துவம்சம் செய்தது.
இதையடுத்து கேஜிஎஃப் முதல் பாகம் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஹிட் கொடுத்து 2ஆம் பாகமும் 4 நாட்களில் 600 கோடியை வசூலித்தது. அதேபோல் ராஜமவுலியின் ஆர் ஆர் ஆர் படமும் பல நூறு கோடியை வசூலித்து கோட்டையை பிடித்தது.
தற்போது எஸ் எஸ் ராஜமவுலி கேஜிஎஃப் படங்களையே தூக்கி எறியும் அளவிற்கு ஒரு பிரம்மாண்ட படத்தினை எடுக்கவுள்ளாராம். ராம் சரண், பிரபாஸ், ராணா, தாரக் போன்ற நடிகர்களை தொடர்ந்து தற்போது தெலுங்கி சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு பக்கம் சென்றுள்ளாராம்.
500 கோடி பட்ஜெட்டில் புதையல் வேட்டை சம்பந்தமான கதைக்களத்தினை ரெடி செய்துள்ளாராம் ராஜமவுலி. கேஎல் நாராயணன் தயாரிக்க இப்படம் ஆப்பிரிக்காவிற்கு சென்று மிகப்பெரிய செட்டினை போட்டு உருவாகவுள்ளதாம்.
இப்படத்திற்கு முதலீடு போட 4 முக்கிய நிறுவனங்கள் போட்டிப்போட்டு வருகிறார்களாம். தற்போது மகேஷ் பாபு சர்க்கார் வாரி பட்டா படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கும் நிலையில் இப்படம் மே மாதத்திற்கு பிறகு ஆரம்பிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.