கோடிக்கு ஆசைபட்டு ஓரங்கட்டும் இயக்குனர்கள்.. தலைக்கனத்தில் ஆடி பேரை கெடுத்துக் கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..
தமிழ் சினிமாவில் கிராமத்து லுக்கில் நடிக்கும் நடிகைகள் பலர் இருந்தாலும் அனைத்து இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் தேர்ந்தெடுக்கும் ஒருவர் என்றால் அது ஐஸ்வர்யா ராஜேஷ் தான். அப்படிபட்ட திறமையும் நடிப்பு கொண்டு சினிமாவில் நல்ல பெயரை எடுத்து வருகிறார்.
இவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்து வருகிறது. அந்தவகையில் காக்கா முட்டை, தர்மதுரை, வடசென்னை, கனா உள்ளிட்ட பல படங்கள் ஐஸ்வர்யா நடிப்பில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
தற்போது டிரைவர் ஜமுனா, மோகன் தாஸ், தி கிரேட் இந்தியன் கிட்சன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இப்படியிருக்கையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மீது தயாரிப்பாளர்கள் கடும்கோபத்தில் இருக்கிறார்கள்.
இப்படங்கள் வெளியாகாமல் இருக்கும் நிலையில், ஒரு படத்திற்காக 1.5 கோடி அளவில் சம்பளம் உயர்த்தி கேட்டு வருகிறாராம். தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் தோழிகளுடன் பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளுக்கு பயணம் செய்து வருகிறார்.