வாய்ப்பில்லாமல் பேட்டிகொடுத்த சேனலில் வேலை பார்க்கும் நிலை! பிரபல நடிகை எடுத்த முடிவு..

Lakshmi Indian Actress Aishwarya Bhaskaran
By Edward Jun 25, 2022 07:51 AM GMT
Report

80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகள் பலர் சினிமாவை விட்டு விலகி வேறு வேலையின்றி காணாமல் போவது வழக்கம். அப்படி பிரபலமான நடிகை பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான ராசுகுட்டி படத்தின் மூலம் நடிகை லட்சுமியின் மகளாக அறிமுகமாகியவர் நடிகை ஐஸ்வர்யா.

முன்னணி நடிகை

ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்தும் க்ளாமர் குயினாக திகழ்ந்து வந்தார் ஐஸ்வர்யா. திருமணத்திற்கு பிறகு ஒரு பெண் குழந்தையை பெற்று சினிமாவில் இருந்து விலகினார். தற்போது மீண்டும் சின்னத்திரையில் குணச்சித்திர ரோலில் நடித்தும் வருகிறார். சமீபத்தில் தனியார் இணையத்திற்கு அளித்த பேட்டியில், நடிக்க வாய்ப்பில்லாமல் சோப்பு விற்கும் நிலையில் தள்ளப்பட்டேன் என்று கூறி ஷாக் கொடுத்தார். அப்படி பேட்டி கொடுத்த தனியார் இணையத்தளத்திலேயே விஜே வேலைக்கு சேர்ந்தார்.

குடியால் போன சினிமா வாழ்க்கை 

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் ஆர்கே சுரேஷ் தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான மாமனிதன் படத்தின் பிரமோஷனுக்காக கொடுத்த பேட்டியை ஐஸ்வர்யா தான் பேட்டி கண்டுள்ளார். தற்போது ஒரு மாதத்திற்கு 40 ஆயிரம் சம்பளத்தில் தற்போது அங்கு பணியாற்றி வருகிறார்.

லட்சத்தில் ஒரு படத்தில் நடித்து சம்பாதித்து வந்த ஐஸ்வர்யாவின் நிலை தற்போது இப்படியாகிவிட்டதே என்று பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஐஸ்வர்யாவிற்கு வாய்ப்பு இழக்க குடியும் ஒரு காரணமாக அமைந்திருக்கிறது.