6 குழந்தைகளுக்கு அம்மா, வயது ஒரு தடை இல்லை.. நடிகை ஐஸ்வர்யாவின் ஷாக்கிங் முடிவு
Aishwarya Rajesh
Tamil Cinema
Actress
By Bhavya
ஐஸ்வர்யா ராஜேஷ்
தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகைகள் ஒவ்வொருவருக்கும் தனி ஸ்டைல் உள்ளது. அப்படி மிகவும் தரமான கதைகளாக தேர்வு செய்து படங்கள் நடித்து மக்கள் மத்தியில் அங்கீகாரம் பெற்றவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
அடுத்தடுத்து படங்கள் நடிப்பவர் வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார்.
6 குழந்தைகளுக்கு அம்மா
இந்நிலையில், பேட்டி ஒன்றில் ஐஸ்வர்யா ராஜேஷ், 4 குழந்தைகளுக்கு தாயாக நடித்தது குறித்து பேசி இருக்கும் விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், " சங்கராந்திகி வஸ்துன்னம் படத்தில் 4 குழந்தைகளுக்கு தாயாக நடித்தேன். 'சங்கராந்திகி வஸ்துன்னம்' 2 எடுத்தால் 6 குழந்தைகள் கூட அம்மாவாக நடிப்பேன்.
குழந்தைகளுக்கு அம்மாவாக நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு நல்ல நடிகை அனைத்து கதாபாத்திரத்திலும் நடிப்பார். இது போன்ற ரோலில் நடிக்க வயது ஒரு தடை இல்லை" என்று தெரிவித்துள்ளார்.