தாயாக சொல்கிறேன், அது பயனுள்ளது இல்லை.. ஐஸ்வர்யா ராய் பரபரப்பு
ஐஸ்வர்யா ராய்
உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய், மணி ரத்னம் இயக்கிய இருவர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழ் படங்களை தாண்டி பாலிவுட்டில் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது.
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஜீன்ஸ், ராவணன், பொன்னியின் செல்வன் என தமிழில் அவ்வப்போது மட்டுமே தலைகாட்டி வருகிறார். இருப்பினும் இவருக்கு தமிழ் சினிமாவில் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
ஐஸ்வர்யா ராய் பரபரப்பு
இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராய் பேசிய வீடியோ ஒன்று இன்ஸ்டாவில் அதிகம் வைரலாகி வருகிறது.
அதில், " நாம் யார் என்பது சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் போஸ்ட்டுகள் ‘லைக்’ மற்றும் கருத்துக்கள் மூலம் தேர்வு செய்யப்படுகிறது. நாம் தான் சமூக வலைத்தளங்களுக்கு அந்த முக்கியத்துவத்தை கொடுத்துள்ளோம்.
ஆனால் அதில் வரும் செய்திகள் பயனுள்ள செய்திகளாக இல்லை. நாம் யார் என்பதை அடுத்தவர் தீர்மானிக்கக் கூடாது இதை நான் ஒரு பெண்ணாகவும், தாயாகவும் சொல்கிறேன்” என்று கூறியுள்ளார்.