48 வயதான நடிகை ஐஸ்வர்யா ராயா இது! பழசை மறக்காத கலாச்சார உலக அழகி..

Aishwarya Rai Indian Actress
By Edward May 20, 2022 02:50 AM GMT
Report

தமிழ் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இருவர் படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இதன்பின் தமிழில் வெளிவந்த ஜீன்ஸ், படத்தில் பிரஷாந்துக்கு ஜோடியாக நடித்து மாபெரும் ஹிட் கொடுத்தார்.

இதனை தொடர்ந்து பாலிவுட் பக்கம் சென்ற ஐஸ்வர்யா ராய்க்கு தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்புக்கு குவிந்தது. அவ்வப்போது சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்து வரும் ஐஸ்வர்யா ராய், தற்போது மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், உலக புகழ் பெற்ற விருதாக கருதப்படும் கேன்ஸ் விழா நடைபெற்று வருகிறது. உலக பிரபலங்கள் கலந்து கொள்ளும் இவ்விழாவில் இந்திய நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

அதில பல ஆண்டுகளாக கலந்து கொண்டு வரும் நடிகையும் முன்னாள் உலகழகியுமான ஐஸ்வர்யா ராய் இந்த வருடமும் தன் கணவர் மகளுடன் கலந்து கொண்டுள்ளார். 48 வயதான ஐஸ்வர்யா ராய் ரசிகர்களை மிரட்டும் விதத்தில் ராயல் ஆடையை அணிந்து பிரம்மிக்க வைத்துள்ளார்.

மேலும் உலகழியாக பட்டம் வாங்கியது முதல் ஐஸ்வர்யா ராய் இன்று வரை இந்திய கலாச்சாரத்தினை பதிவு செய்வது வழக்கம். அப்படிதான் கேன்ஸ் விருது ரெட்கார்பேட்டில் ஐஸ்வர்யா ராய் கையெடுத்து கும்பிட்டு வணக்கம் தெரிவித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

GalleryGalleryGalleryGallery