கோடியில் குளிப்பாட்டிய தயாரிப்பாளர்!! நடிகை ஐஸ்வர்யா ராயின் மொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா..
தமிழ் சினிமாவில் இருவர் படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் நடிகை ஐஸ்வர்யா ராய். உலக அழகி பட்டம் வென்று இயக்குனர் மணிரத்னத்தால் நடிகையாக அறிமுகம் செய்யப்பட்டு அடுத்தடுத்த படங்களில் நடித்து முன்னணி நடிகையாகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் திகழ்ந்து வந்தார்.
நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து ஒரு பெண் குழந்தையை பெற்று வளர்ந்து வந்தார். குழந்தை வளர்ந்தப்பின் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் ஐஸ்வர்யா ராய், சமீபத்தில் மணிரத்னமின் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறார்.
நடிகை ஐஸ்வர்யா ராய் ஒரு படத்திற்காக சுமார் 12 கோடி அளவில் சம்பளமாக பெற்று வருகிறாராம். இந்நிலையில், ஐஸ்வர்யா ராயிம் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஐஸ்வர்யா ராய் பெயரில் பல பங்களாக்களும் நிலங்களும் இருக்கிறதாம். ராய்ஸ் கோஸ்ட், ஆடி ஏ 8 எல் உட்பட பல கார்களும் இருக்கிறதாம்.
அவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 776 கோடி இருக்கும் என்றும் பொன்னியின் செல்வன் படத்திற்காக 10 கோடி சம்பளமாக ஐஸ்வர்யா ராய் பெற்றதாகவும் கூறப்படுகிறது.