அறுவெறுப்பான விஷயம்.. 50 வயதில் முன்னாள் காதலுடன் நெருக்கமா?.. ஐஸ்வர்யா ராய் பதிலடி!!
தொழிலதிபர் முகேஷ் அம்பானி - நீடா அம்பானி தம்பதியின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணம் வெகு விமரிசையாக நடந்து முடிந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பல திரைபிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்த திருமண நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் தனித்தனியாக கலந்து கொண்டனர். ஆனால் சல்மான் கானின் கைகோர்த்த படி ஐஸ்வர்யா போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. ஆனால் உண்மையில் அந்த புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டது என்று தெரியவந்தது.

இந்நிலையில், ஐஸ்வர்யா ராய் தற்போது இதை பற்றி பேசியுள்ளார். அவர் கூறியதாவது, "எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருக்கிறது. திருமணமான ஒரு பெண்ணை, அதுவும் ஒரு பெண்ணுக்கு தாயான ஒருவரை இப்படியா பேசுவது? புரளியை கிளப்பும் இந்த சமூகத்தில் வாழ்வதற்கே அறுவெறுப்பாக உள்ளது," என்றார்.