ஜெய்யுடன் இரவு பார்ட்டி!! இதுவரை இல்லாத கவர்ச்சி மாறிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..
தமிழில் நீதானா அவன் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்த தமிழ் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமான ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபகாலமாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார்.
அடக்கவுடக்கமாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த, கடந்த 10 படங்கள் படுதோல்வியை சந்தித்து வந்துள்ளது. மேலும் பல படங்களில் நடித்தும் வருகிறார். சமீபத்தில் ஜிவி பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக DeAr படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் சமீபத்தில் வெளியாகியுள்ள நிலையில் கருப்பர் நகரம், மோகன் தாஸில் ஒரு படத்திலும், தீயவர் குலைகள் நடுங்க, ஹெர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் கன்னட சினிமாவில் அறிமுகமாகவிருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகை பாவனாவுடன் உத்ரகாண்டா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
எப்போதும் அடக்கவுடக்கமாக ஆடையணிந்து போட்டோஷூட் எடுக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் வெள்ளைநிற சட்டையில் கிளாமர் போஸ் கொடுத்து போட்டோஷூட் எடுத்திருந்தார். தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமர் காட்டியபடி போட்டோஷூட் எடுத்திருக்கிறார்.
மேலும் இரவு பார்ட்டியில் கலந்து கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்திருக்கிறார். அதில், நடிகர் ஜெய், வைபவ், இயக்குனர் வெங்கட் பிரபு, நடிகை வாணி போஜன், சம்யுக்தா ஷான், சங்கீதா உள்ளிட்டவர்களுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.

