என்னது ஐஸ்வர்யா ராஜேஷுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்களா? சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படம்
Aishwarya Rajesh
By Parthiban.A
ஐஸ்வர்யா ராஜேஷ் என்ன தான் நடிப்பு திறமைக்காக அதிகம் பேசப்பட்டாலும் அவருக்கு சொல்லும் அளவுக்கு பெரிய ஹீரோக்களின் படங்களில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும் தங்கை ரோல் போன்ற வேடங்கள் தான் கிடைக்கிறது.
அதனாலேயே ஐஸ்வர்யா ராஜேஷ் பெண்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
மூன்று குழந்தைகளுக்கு அம்மாவா ஐஸ்வர்யா ராஜேஷ்?
தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் ஃபர்ஹானா என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் இஸ்லாமிய பெண் தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி வைரல் ஆகி இருந்தது.
இந்த படம் பற்றிய மேலும் தகவல்கள் தற்போது வெளிவந்திருக்கிறது. அதில் ஐஸ்வர்யா ராஜேஷ் மூன்று குழந்தைகளின் அம்மாவாக தான் நடித்து வருகிறாராம்.
ஏற்கனவே அவர் காக்கா முட்டை படத்தில் இரண்டு குழந்தைகளின் அம்மாவாக நடித்திருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.