கவர்ச்சியாக நடிக்க அழைப்புகள் வந்தது, ஆனால்!! ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் டாக்

Aishwarya Rajesh Indian Actress Sri Lankan Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jul 17, 2024 04:30 PM GMT
Report

தொகுப்பாளினியாக தனது பயணத்தைத் தொடங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். "காக்கா முட்டை" படத்தின் வெற்றிக்குப் பிறகு, அவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தன.

நயன்தாராவுக்குப் பிறகு, பெண்களை மையமாகக் கொண்டு வரும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். முக்கிய வேடங்களில் நடித்த "பூமிகா," "டிரைவர் ஜமுனா," "சொப்பன சுந்தரி," "ஃபர்ஹானா," "திட்டம் இரண்டு," "தி கிரேட் இந்தியன் கிச்சன்" ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

கவர்ச்சியாக நடிக்க அழைப்புகள் வந்தது, ஆனால்!! ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் டாக் | Aishwarya Rajesh Open Talk

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ், படங்களில் கவர்ச்சியாக நடிப்பது குறித்து பேசியுள்ளார். அதில் அவர், கவர்ச்சியாக நடிக்க எனக்கு நிறைய அழைப்புகள் வந்தன. இருப்பினும் நான் அந்த கதைகளை தேர்வு செய்யவில்லை. அதற்கு காரணம், என்னை பொறுத்தவரை எனக்கு பொருத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன்.

எனக்கு அந்த விஷயம் தேவையா என்ற சந்தேகங்களை எழுப்பும் ஒன்றை நான் செய்ய விரும்பவில்லை என்னுடைய படங்கள் சமூக பொறுப்புடன் இருக்க வேண்டும். குடும்பங்களை மகிழ்விக்க வேண்டும் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.