இதுவரை இல்லாத அளவிற்கு சொப்பன சுந்தரியாக மாறிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!! வைரலாகும் வீடியோ..

Aishwarya Rajesh
By Edward Mar 02, 2023 04:00 PM GMT
Report
150 Shares

தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி படத்தின் மூலம் சிறு கதாபாத்திரத்தில் நடித்து நடிகையாக அறிமுகமாகி காக்கா முட்டை படத்தில் சிறப்பாக நடித்து தேசிய விருது வாங்கிய நடிகையாக பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இப்படத்தினை தொடர்ந்து குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து கிராமத்து லுக்கில் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்து வருகிறார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்யும் நயன் தாரா பாணியில் படங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்தடுத்த படங்களில் நடித்து பிஸியாக இருந்து வருகிறார்.

சமீபத்தில் இயக்குனர் எஸ் ஜி சார்லஸ் இயக்கத்தில் சொப்பன சுந்தரி என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

அவருடன் தேசிய விருது நடிகை லட்சுமி பிரியா, தீபா சங்கர், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். காரை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் டிரைலர் இணையத்தில் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.