விவாகரத்து கணவரை வெறுப்பேற்ற என் கணவர் தான் கிடைச்சாரா? கோபத்தில் செளந்தர்யா ரஜினிகாந்த்..
நடிகர் தனுஷை விவாகரத்து செய்த பின் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் நடவடிக்கைகள் எல்லாம் சினிமாவையே சார்ந்திருந்து வருகிறார். சமீபத்தில் பயணி என்ற பாடல் ஆல்பத்தினை வெளியிட்டார். இதையடுத்து பாலிவுட் சினிமாவில் இயக்குனராக அவதாரம் எடுக்கவுள்ளார்.
மேலும் ராகவா லாரண்ஸை வைத்தும் ஒரு படம் எடுக்க முடிவெடுத்து அதன் வேலைகளும் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் தன்னுடைய தங்கை செளந்தர்யா ரஜினிகாந்தின் கணவர் விசாகனை வைத்து படம் எடுக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே செளந்தர்யா ஐஸ்வர்யாவின் கணவர் தனுஷை வைத்து விஐபி 2 படத்தினை இயக்கி இருந்தார். அதேபோல் ஐஸ்வர்யாவும் விசாகனை ஹீரோவாக நடிக்க வைக்கப்போகிறாராம்.
இந்த விஷயம் செளந்தர்யா ரஜினிகாந்திற்கு பிடிக்கவில்லை என்றும் கூறபடுகிறது. விசாகன் தொழிலதிபராக இருந்து படத்தினை தயாரித்தும் வஞ்சகர் உலகம் என்ற படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.