அந்த நடிகரை திருமணம் செய்ய ஆசைபட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!! லதாவின் முடிவு இதுதானா..
நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
சமீபத்தில் தனுஷ் இரண்டாம் திருமணம் செய்ய போகிறார் போன்ற தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்த வண்ணம் இருக்கிறது.
இந்நிலையில், பிரபல சினிமா பத்திரிக்கையாளர் சுபைர், ஐஸ்வர்யா - தனுஷ் விவாகரத்து குறித்து பேசியுள்ளார். அதில் அவர், திருமணம் என்றாலே இரண்டு சம்பந்தி இடையே பிரச்சனை ஏற்பட தான் செய்யும். ரஜினிகாந்த் குடும்பத்தார் வாழ்ந்த ஸ்டைல் வேறு, தனுஷ் குடும்பத்தார் வாழ்ந்த ஸ்டைல் வேறு. இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்படும்.
ரஜினிகாந்துக்கு ஐஸ்வர்யா - தனுஷ் விவாகரத்து விஷயத்தில் கொஞ்சம் கூட உடன்பாடு இல்லை. இவர்களை சேர்த்துவைக்க நிறைய முடிவுகளை எடுத்தார். ஆனால் பயன் அளிக்கவில்லை.
ஆரம்பத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷை விரும்புகிறேன் லவ் பண்ணுறேன் என்று சொன்னதும் லதா ரஜினிகாந்துக்கு அதில் கொஞ்சம் கூட உடன்பாடு இல்லை. அவர்கள் இன்ட்ரெஸ்ட் காட்டவில்லை. சில பேச்சுவார்த்தைகளுக்கு பின்பு தான் அந்த திருமணம் நடந்தது என்று சுபைர் தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: பத்திரிக்கையாளர் சுபைர் தெரிவித்துள்ள இந்த கருத்து அவருடைய சொந்த கருத்தே. இதற்கும் விடுப்பு பக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.