விவாகரத்துக்கு பின் தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யாவின் சொத்து மதிப்பு இவ்வளவா?

Dhanush Rajinikanth Aishwarya Rajinikanth
1 மாதம் முன்
Edward

Edward

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளாக நடிகர் தனுஷை 2004ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். 18 வருட திருமண வாழ்க்கையில் இரு மகன்கள் இருக்கும் நிலையில் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிய முடிவெடுத்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இச்செய்தி மக்கள் மத்தியிலும் சூப்பர் ஸ்டார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. எவ்வளவு சமாதானப்படுத்தியும் இருவரும் வழிக்கு வரவில்லை.

தற்போது தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தி வரும் ஐஸ்வர்யா உடற்பயிற்சி மற்றும் சைக்கிளிங் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டும் படங்களில் இயக்கும் வேலையிலும் பிஸியாக இருந்து வருகிறார்.

கிடைக்கும் நேரத்தில் மகன்களுடன் செலவிட்டு வரும் ஐஸ்வர்யா சில தினங்களுக்கு முன் கூட ஐபிஎல் போட்டியில் பெங்களூர்-ராஜஸ்தான் போட்டியை கண்டுகளித்திருந்தார். தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மொத்த சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது.

3 மற்றும் வை ராஜா வை என்ற படத்தினை இயக்கியும், பயணி போன்ற ஆல்பம் பாடலை இயக்கியும் இருக்கிறார் ஐஸ்வர்யா. தற்போது ராகவா லாரன்ஸை வைத்து பாலிவுட் படம் ஒன்றினை இயக்க இருக்கிறார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மொத்த சொத்து ரூ. 20 கோடியில் இருந்து 30 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. நடிகர் தனுஷின் சொத்து 150 கோடி வரை இருக்கும் என்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு 410 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.