பிக்பாஸ் 9ல் இந்த வாரம் எவிக்ட்டாகி வெளியேறியது சுபிக்ஷா இல்லையாம்!! இவர் தானாம்..
பிக்பாஸ் சீசன் 9 83 days
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கப்பட்டு வரும் நிலையில், 83 நாட்களாகியும் எந்தவொரு ஸ்வாரஷ்யமான சம்பவமும் நடக்கவில்லையே என்று ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.
இந்த வாரம் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த நிலையில், கடந்த வாரம் ஆதிரை இரண்டாம் முறையாக எவிக்ட்டாகி பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார்.

இதனையடுத்து ஃபேமிலி டாஸ்க் நிறைவடைந்த நிலையில், இந்தவாரம் மிட்வீக் எவிக்ஷன் நடக்கவுள்ளதாகவும் யார் வெளியேறப்போகிறார் என்ற தகவலும் வெளியானது.
எவிக்ட்
அதில் சுபிக்ஷா வெளியேற்றப்பட்டார் என்ற தகவலும் வெளியானது. ஆனால் இந்த வார சனிக்கிழமை எபிசோட்டில் சுபிக்ஷா இருந்துள்ளார்.
அப்படி என்றால் சுபிக்ஷா பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறவில்லை என்றும், அமித் பார்கவ் தான் குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
